“விசிக தூண், திருமா எங்களுக்கு தாய் சிறுத்தை”- அமைச்சர் ராஜ்மோகன்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூண் போலச் செயல்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூண் போலச் செயல்படுகிறது. தவெக - விசிக கூட்டணி உறுதியாக உள்ளது. திருமாவளவன் எங்களுக்கு தாய் சிறுத்தை. அவரும் முதல்வர் விஜய்யும் சேர்ந்திருப்பது கொள்கைக் கூட்டணி. அந்தக் கூட்டணி பலமாக உள்ளது. முதல்வரின் நாகரிக அரசியலுக்கு எடுத்துக்காட்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பு. நட்பு அரசியலுக்கு எடுத்துக்காட்டு ராகுல் காந்தியுடனான சந்திப்பு. ராகுல் காந்தியுடன் தவெக தலைவராகச் செயல்பட்டார், பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வராகச் செயல்பட்டார். முதல்வரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; பெற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி உடன் சந்திப்பு நட்பு ரீதியிலானது, பிரதமருடன் சந்திப்பு என்பது முதல்வர் என்ற ரீதியிலானது” என்றார்.