"என் தாயின் மீது சத்தியமாக அப்படி கூறவில்லை..." - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
தாராபுரம் பரப்புரையின்போது தவெக வேட்பாளர் சத்தியபாமக கண்ணீர் சிந்துவதற்கு முன் காதில் ஏதோ கூறினார் எனதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தாராபுரத்தில் செப்டம்பம்பர் 30ம் தேதி முதலமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அக்கட்சி வேட்பாளர் சத்யபாமா கண் கலங்கினார். அவர் அழுததும், அவரை முதலமைச்சர் தேற்றியதும் நாடகம் என கனிமொழி எம்.பி. விமர்சித்திருந்தார். இதனிடையே இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அருண்ராஜ் பேசும் போதே நேரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கூறினார்கள். அது போல தான் சத்தியபாமா பேசும் போது என்னிடம் கூறினார்கள். என் தாயின் மீது சத்தியமாக கூறுகிறேன், அவரை அழுமாறு நான் கூறவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த குற்றச்சாட்டை வைக்கின்றனர். வெயிலில் மக்கள் காத்திருந்ததால், சீக்கிரம் முடிக்குமாறு தான் கூறினேன். அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டணி மாற்றங்கள் குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்வார்” என்றார்.