☰
×

“திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது”- அமைச்சர் ராஜ்மோகன்

 

ருத்து சுதந்திரத்திற்கு எல்லைக் கோடு உள்ளது. வேண்டுமென்றே இல்லாத Data-வை தங்களின் வசதிக்கு ஏற்ப வளைக்கக் கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 122 வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தேர்தல் ஆணையரை தனிநபராக மாற்றினால் மட்டும் பிரச்சினை முடிந்துவிடாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக SIR பணியே மோசடி என்று அறிக்கை வெளியிட்டது. தேர்தல் ஆணையர் மாற்றத்தை மட்டும் முன்னிறுத்துவது, தனிநபர்களை பலிகடா ஆக்கி தப்பிக்கும் முயற்சி. திசைதிருப்பும் அரசியலுக்கு தமிழக வெற்றி கழகம் இரையாகாது. சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்ற தமிழக அரசின் புதிய உத்தரவு கருத்து சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருத்து சுதந்திரத்தின் லட்சுமண கோட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருத்து சுதந்திரத்திற்கு எல்லைக்கோடு உள்ளது. வேண்டுமென்றே இல்லாத Data-வை தங்களின் வசதிக்கு ஏற்ப வளைக்கக் கூடாது” என்றார்.