“வீரமணி கேஸ் முதல்வரின் கண்காணிப்பில் இருக்கு; யாரும் தப்பிக்க முடியாது”- ராஜ்மோகன்
அரசியல் சார்பு இருந்ததால்தான் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இத்தனை நாள் பேசாமல் இருந்தார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அரசியல் சார்பு இருந்ததால்தான் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இத்தனை நாள் பேசாமல் இருந்தார்கள். தற்போது வெளியே வந்து புகார் கொடுத்துள்ளார்கள். அதிகாரம் இருந்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. இனி அது நடக்காது. எல்லாரும் இதை பற்றி பேசுகிறோம். அன்றைய முதல்வர் ஸ்டாலின் அய்யாவும் பேச வேண்டும். உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துள்ளார்கள். அதை கண்டித்தாவது வாயை திறங்கள் ஸ்டாலின் சார்.... ஜெம் வீரமணி Case முதல்வரின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. வீடியோ Clarity இல்லனு கேக்குறாரு.. HD வீடியோவா வேணும்.. மருந்தளவு மனசாட்சி வேண்டாமா?
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை சென்ற ஆட்சியில் ஒழுங்காக நடத்தியிருந்தால் இது ஒரு நல்ல விழிப்புணர்வாக மாறியிருக்கும். யாருக்காக இந்த வழக்கை மூடி மறைத்தார்கள். இந்தியாவை உலுக்க கூடிய வழக்காக இது மாறியிருக்கிறது. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் போன்று பலர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். பல கோடி கொடுக்கப்பட்டு பலருடைய வாய்கள் மூடப்பட்டுள்ளன. போக்சோ வழக்கில் FIR பதிவு செய்ததையே பெரிய விஷயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக தேசிய விருது கொடுப்போமா? ஏன் வழக்கை மூடினார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டும்” என்றார்.