×

''தூய்மை பணியாளர்களை நிச்சயம் முதலமைச்சர் சந்திப்பார்''- அமைச்சர் ராஜ்மோகன்

 

தூய்மைப் பணியாளர்கள் கூட்டம் போராட்டம்போல் அல்ல, மாநாடுபோல் இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். 

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மை பணியாளர்களுடனான பேச்சு நிறைவு...  தூய்மைப் பணியாளர்கள் கூட்டம் போராட்டம்போல் அல்ல, மாநாடுபோல் இருக்கிறது. நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் உள்ளன. தூய்மை பணியாளர்களுக்கான வசதிகளை நேரில் ஆய்வு செய்வேன். அவர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளது. அவர்களின் மீதான போராட்ட வழக்குகள் உடனடியாக வாபஸ் வாங்கப்படும்.

அக்டோபர் 3ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். போராட்டத்தில் ஈடுபட்டதால் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்படும்..  போராட்டக்காரர்கள் உறுதியாக முதல்வரை சந்திப்பார்கள். மழை காலத்துக்கு முன்பு ரெயின் கோட் வழங்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு இரண்டு மாஸ்க் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றி. சொன்ன சொல்லுக்கு ஏற்ப நேர்மையான முறையில் போராடிய தூய்மை பணியாளர்கள் பொது பணியிலும் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய சட்ட சிக்கல் இல்லைநிர்வாக சிக்கல் உள்ளது. அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.