×

எஞ்சியவர்களை மீட்டு வர நடவடிக்கை- ராஜ்மோகன்

 

நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழர்கள் வெள்ளத்தில் தங்களின்  பாஸ்போர்ட்டுகளை தவறவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். மற்ற தமிழர்களை தொடர்பு கொள்ள போராடுகிறோம். இன்றிரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகின்றனர். நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். கும்பகோணம், தஞ்சையை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவதில் வெளியுறவுத் துறையுடன் தொடர்பில் இருக்கிறோம். மீட்கப்பட்ட தமிழர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளை வெள்ளத்தில் தவற விட்டுள்ளனர். அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நேபாளத்திற்கு சுமார் 400 தமிழர்கள் சென்றுள்ளனர்.. அதில் ஏறத்தாழ 90 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள போராடுகிறோம். தமிழர்களை மீட்டு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி. நேபாளில் இருந்து திரும்பிய தமிழர்கள் நலமுடன் உள்ளனர். மீட்கப்பட்ட தமிழர்கள் இரவு சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்” என்றார்.