×

மதுரை உசிலம்பட்டியில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடல்! காரணம் என்ன?- அமைச்சர் விளக்கம்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனாப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் இயங்கி வந்த அரசு தொடக்கப்பள்ளிகள், மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டியதால் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்கள் ஒருவர்கூட இல்லாத சூழலிலேயே நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல சலுகைகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என்றார்.