"அது மனித பிழை அல்ல, AI பிழை.. இனி இது மாறி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்"- அமைச்சர் ராஜ்மோகன்
பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா தொடர்பான நல்லசெய்தி விரைவில் வரும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட விளக்க வீடியோவில் எழுத்துப் பிழைகள் இருந்தது மனிதர்கள் செய்த தவறு கிடையாது. ஏ.ஐ பிழைதான்.. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா தொடர்பான நல்லசெய்தி விரைவில் வரும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளி சட்டமன்ற உறுப்பினர் தேர்வாகியுள்ளார். எந்தக் காரணத்தைக் கூறியும் பள்ளிகளில் PT பீரியட்டை ரத்து செய்யக் கூடாது. பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா தொடர்பான நல்லசெய்தி விரைவில் வரும். மன்னார்குடி அருகே கார் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு அரசு என்றும் துணை நிற்கும்.