×

"பாரதியாரே கோட் சூட்டு போட்டு தான் தமிழ் பணி செய்தார்.."- ராஜ்மோகன்

 

தமிழக சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் எழுப்பிய கேள்விக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த இந்த பதில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

பாஜக MLA போஜராஜனின் கேள்வி: முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார். முதல்வரை போல் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டி சட்டையில் வந்திருக்கும்படி செய்திருக்கலாம் எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், "தமிழ் உணர்வு ஆடையில் அல்ல, செயலில் இருக்கிறது. பாரதியார் கூட கோட் சூட் அணிந்து தான் பணி செய்தார்" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வரலாற்று உண்மை:

பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணிபுரிந்த போதும், காசிக்குச் சென்று வந்த பிறகும் கோட், சட்டை மற்றும் தலைப்பாகை (Turban) அணிந்தே காணப்பட்டார் என்பது வரலாற்று ரீதியாக உண்மை