×

இன்றும், நாளையும் 9636 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன – அமைச்சர் ராஜகண்ணப்பன்

நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள சூழலில் கோயம்பேட்டில் போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், “மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இன்றும், நாளையும் கூட்ட நெரிசல் சிரமம் இன்றி மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இன்று மற்றும் நாளை என இரு தினங்களில் 9636
 

நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள சூழலில் கோயம்பேட்டில் போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், “மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இன்றும், நாளையும் கூட்ட நெரிசல் சிரமம் இன்றி மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக இன்று மற்றும் நாளை என இரு தினங்களில் 9636 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மக்கள் கூட்டமின்றி செல்லலாம். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.