தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்கு ஈபிஎஸ் துணைபோவது வெட்கக்கேடு- அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது, பாஜக, ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியாக அதிமுகவை மாற்றிய ஈபிஎஸ்க்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில், “பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணா திமுகவை அமித்ஷா திமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு. மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.