☰
×

விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டார் - ரகுபதி 

 

இடைத்தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பணப் பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்கள்  என  தவெக மீது முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமீபத்தில் முதலமைச்சர் விஜய் வருகை புரிந்தார். புதிய திட்டங்களை அறிவிக்கப் போவதாக மக்கள் காத்திருந்த நிலையில், ஜோசியக்காரர் சொன்னதற்காக புதிய திட்டங்களை அறிவிக்காமல் சென்றுவிட்டார். இடைத்தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பணப் பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்கள். இடைத்தேர்தல் நடக்கவுள்ள விராலிமலை தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2,000 மதிப்பிலான பொருட்களை விநியோகிக்கிறார் விஜயபாஸ்கர். இதுதான் தூய்மையான ஆட்சி. 90 ஆயிரம் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு எனும் பெயரில் விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்துவருகிறார்.  

சிறைத்துறை பாதுகாப்பு திமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தது. இப்போது பாதுகாப்பில்லை என்பதற்கு தவெக அரசாங்கமே ஒப்புக்கொண்டதற்கு சாட்சி தான் அவர்கள் அமைத்த கமிட்டி.  புதுக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் தங்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்டது, திமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது." என்றார்.