"இனி திமுக தனித்தே போடியிடும்"- ரகுபதி
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கட்டும் என நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பம் குறித்து ரகுபதி அளித்த பதில் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, "செங்கோட்டையனை போல் முன்னுக்கு பின் முரணாக பேசுகிற ஒரு பயந்தாங்கோலி அமைச்சர் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது. இனி தனித்து நின்று வெற்றி காண்போம். தி.மு.க ஆட்சியில் என்னுடைய முயற்சியால் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.. நேற்று திறந்து வைத்துள்ளார்கள். ஆனால் இந்த தொகுயின் எம்.எல்.ஏவான எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. தொலைபேசியில் கூட அழைக்கவில்லை. சென்னையில் தண்ணீர் தேங்காமல் விரைவில் வடிவதற்கு காரணம் நாங்கள். தி.மு.க ஆட்சியில் செய்த பணி..! 4 மாதத்தில் என்ன செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்..?
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? தமிழ்நாடு முழுவதும் அனைத்து நடிகர்களும் ஆளுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்து வரட்டும். அடுத்த தேர்தலில் பல நடிகர்களின் கட்சி சின்னங்கள் இருக்கும்" என்றார்.