×

“தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல, ஏமாளிகள் அல்ல”- அமைச்சர் ரகுபதி

 

கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் பண்டிகை, இந்துத்துவா அமைப்புக்கு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் பண்டிகை, இந்துத்துவா அமைப்புக்கு எந்த வேலையும் இல்லை. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 2014ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நாங்கள் நடந்துகொள்கிறோம். எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.பாரம்பரியத்தின்படி நேற்று மலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். கார்த்திகை தீபம் என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது. மத நல்லிணக்கத்திற்கு இந்தியாவிலேயே எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான்.. தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல, ஏமாளிகள் அல்ல” என்றார்.