×

பொய்பாடி பழனிசாமி என்றே இன்று சட்டமன்றம் முழுக்க முழுக்க ஒலித்தது- அமைச்சர் ரகுபதி

 

எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “கரூரில் அரசு எடுத்த துரித நடவடிக்கையால் தான் பலர் காப்பாற்றப்பட்டனர். அரசின் மீது குறைகூற முடியாமல் தோல்வி முகத்துடன் தான் ஈபிஎஸ் உள்ளிட்டோர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நடிகரை வேடிக்கை பார்ப்பதற்காகவே கரூரில் மக்கள் கூடினர், வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் விஜய் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டது. இரவோடு இரவாக அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் பலர் காப்பாற்றப்பட்டனர். இன்றைக்கு சட்டமன்றத்தில் முழுக்க முழுக்க பொய்யாகவே பொய்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் மீது குற்றம் காண முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி. கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணி சேர்க்கலாம் என இபிஎஸ் கனவு காண்கிறார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும். எதிலாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்து அதில் அரசியல் செய்யலாம் கூட்டணி சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” என்றார்.