×

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாவட்ட செயலாளர் காலில் விழுந்த அமைச்சர் ரகுபதி 

 

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க காலதாமதமாக வந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியனை கையெடுத்து கும்பிட்டு, தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து காக்க வைக்க வேண்டாம் என்று கூறி காலில் விழுந்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையிலும் பல்வேறு கட்சியினர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரக்கூடிய நிலையில், திமுக சார்பில் காலை 9 மணிக்கு புதுக்கோட்டை கீழராஜ் வீதி அருகாமையில் உள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் சரியாக 9:00 மணிக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி வருகை தந்தார்.