×


9,000 ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளது- பொன்முடி

 

9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதால்  சட்ட வல்லுநர்களுடனும் முதலமைச்சரிடமும் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படவில்லை என்று 5-வது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தினார். அதன்படி, இன்று அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம். அவர்களுக்கு பணி வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக சட்ட வல்லுநர்களுடனும் முதலமைச்சரிடமும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

மாநில கல்விக் கொள்கைக்கான குழு என் தலைமையில் தான் அமைக்கப்பட்டுள்ளது, அதில் புதிய கொள்கைகளை புகுத்த மாட்டோம். ஏதேனும் கருத்துகள் இருந்தால் அதையும் இணைத்துக் கொள்வோம், சென்னை பல்கலை கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் அனைத்து உலக தொடர்புகள் எனும் பாடப் பிரிவு சிண்டிகேட் கூட்டத்தில் பேசி மீண்டும் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.