×

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வங்கியில் செலுத்தப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்

 

பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 1000 வங்கியில் கணக்கில் செலுத்த வாய்ப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, சிவகங்யை அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வேலுநாச்சியார் திருவுருவச்சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே. ஆர். பெரியகருப்பன், “பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 1000 வங்கியில் கணக்கில் செலுத்த வாய்ப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி நியாய விலை கடைகளில் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக கரும்புகள் வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படாது. தமிழகத்தில் இருந்து தான் கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என்றார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா பாதிப்பால் தான், பொங்கல் தொகுப்பில் ரூ 5000 வழங்க வேண்டுகோள் விடுத்தோம். இப்போது அந்த சூழ்நிலை இல்லை. தொடர்ந்து கால சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து துறைகளும் நவீனமாக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கூட்டுறவுத்துறையும் நவீனமாக்கப்படும், நஷ்டத்தில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.