×

முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.!

 

முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கம் முழுவதும் விஜய் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை தமிழகம் முழுவதும் 9 மணி காட்சி தொடங்கிய நிலையில், பல ஊர்களில் அமைச்சர்கள் முதல் ஷோவில் படத்தை பார்த்து வருகிறார்கள். 

அந்த வகையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் அமைச்சரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் படத்தை பார்த்தனர். இதே போல ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையனும் படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று படம் வெளியான நிலையில் கடந்த 30 வருடமாக விஜய் நடித்த படங்களில் தொகுப்பானது ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில் ஒளிபரப்பபட்டது. இதனை பார்த்த அமைச்சர் பர்வேஷ் கண்ணீர் விட்டு அழுதார். தனது தலைவனின் கடைசி படம் என்பதால் அடக்கமுடியாமல் விசும்பி, விசும்பி அமைச்சர் பர்வேஷ் அழுதார். இதனை பார்த்த திரையரங்கில் இருந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

கடைசியாக முதல்வராவதற்கு முன் எம்ஜிஆர் நடித்த மீனவ நண்பன் திரைப்படம், அவர் முதல்வரான பின் வெளியாகியது. தற்போது எம்ஜிஆருக்கு பின் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் முதல்வரான பின் வெளியாகி இருக்கிறது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/g7FDxk6QVL0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/g7FDxk6QVL0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">