விருதுநகரி கல்குவாரிகளை மூட அமைச்சர் அதிரடி உத்தரவு
விருதுநகரில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்· புலியூரான் கிராமத்தில் செயல்பட்ட தனியார் கல்குவாரியில் ஆய்வு செய்த நிலையில், கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்·
விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரால் மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலமாக அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. இந்நிலையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு, 26.05.2026 அன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொண்டார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன. மேலும் ஆளில்லா விமானம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.