தலீத்துகளுக்கு எதிரான வன்முறை - அமைச்சர் நிர்மல்குமார்
கடந்த தி.மு.க ஆட்சியில் பட்டியலின தாசில்தாரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் இலாகா தான் மாற்றப்பட்டது தவிர அமைச்சர் மீது தி.மு.க ஆட்சியில் ஏன் எந்த வழக்கும் பதியவில்லை..? என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தி.மு.க ஆட்சியில் தலீத் மக்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. அமைச்சர் ஒருவரே பட்டியலினத்தை சேர்ந்த தாசில்தாரை தாக்கிய சம்பவத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதே போல பல விவகாரங்களில் பதிவு செய்யப்படவில்லை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் தமிழகம் தான் முதலிடத்தில் இருந்திருக்கும். மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு மீண்டும் வந்தது. அதை, தாங்கள் தான் கொண்டு வந்ததாக ஆளாளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். ஜல்லிக்கட்டை கிளாடியேட்டர் என நினைத்து, அதற்கு ஊருக்கு வெளியே ஸ்டேடியம் கட்டியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு, அந்தந்த ஊரில் நடத்தப்படுவது தான் ஜல்லிக்கட்டின் பெருமை. ஸ்டேடியத்தில் முட்டிப்பார்க்க அது என்ன கிளாடியேட்டரா?” எனக் கேள்வி எழுப்பினார்.