☰
×

"எங்க எம்எல்ஏக்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர்.. தவெகவை வீழ்த்த முயற்சி" - அமைச்சர் நிர்மல்குமார்

 

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க திமுக – அதிமுக இணைந்து முயற்சிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் நடைமுறை 2003ம் ஆண்டில் இருந்து தொடர்கிறது. கரூர் கம்பெனி தலையிடுறாங்க அப்டின்னா.... பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குறது எத்தன வருட பிரச்சனை..? இதை சரி செய்ய முயற்சித்தால் எதிர்ப்புகள் வர தான் செய்யும்.  23 ஆண்டுகால சிஸ்டத்தை மாற்றும்போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். இனிமே யாருக்கும் தெரியாமல் Power Shutdown பண்ணக்கூடாது.. தேவையில்லாத காரணங்களுக்கு Shutdown செய்தால் அவங்க மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்

பாஜக உதவியுடன் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. தவெக MLA-க்களை விலைக்கு வாங்க திமுக, அதிமுக முயற்சிக்கிறது. பாஜக, அதிமுக, திமுக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.. எங்கள் தலைவர் யாருக்கும் பயப்படவில்லை.. எப்போதும் எந்த தேர்தலையும் சந்திக்க தயார். தவெக MLA-க்கள் யாரும் விலை போக மாட்டார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் கொடுத்தவர்கள் சிக்கி, கைதாகி நிற்கிறார்கள். பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளனர். உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தலாம். அனைவரும் சேர்ந்து தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.