"கரூர் கம்பெனிகள் போராட்டத்தை தூண்டிவிடுகின்றன"- நிர்மல்குமார்
இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் எந்த மாவட்டத்திற்கும் செல்லவில்லை, திட்டங்களைத் தொடங்கி வைக்கவே செல்கிறார் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், "இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. திட்டங்களை தொடங்கி வைக்கவே செல்கிறார். எத்தனை இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க நாங்கள் தயார். இடைத்தேர்தலை நினைத்து ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் பயம் வந்துவிட்டது. ஆனால் விஜய்க்கு எந்த பயமும் கிடையாது. கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை வைத்து மாதத்திற்கு ரூ.60 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இந்த பணம் கரூர் கம்பெனிக்கு சென்றுள்ளது. இந்த வருமானம் நிறுத்தப்பட்டதால் கடையை அடைக்கின்றனர். எல்லா தொழிற்சங்கங்களும் கடை அடைக்கவில்லை, திமுகவை சார்ந்த தொழில் சங்கங்கள் மட்டுமே இடைஞ்சல் செய்கின்றன. டாஸ்மாக் காலி மது பாட்டில் விவகாரத்தில் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.60 - ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதை சீரமைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விரும்பாமல் ‘கரூர் கம்பெனிகள்’ போராட்டத்தை தூண்டிவிடுகின்றன" எனக் குற்றஞ்சாட்டினார்.