கரூர்லயே போட்டுருக்கனுமா? எவ்ளோ கேவலமானவங்க.. - அமைச்சர் நிர்மல்குமார் ஆவேசம்
திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.400 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிரமல்குமார் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிரமல்குமார், குழந்தைங்க பாதுகாப்புல கூட திருட்டுத்தனம் வெக்கமே இல்லையா? முதலமைச்சர் விஜய் தனது மேசையில் இருந்த 3 கோப்புகளில் ஒன்றை திறந்துவிட்டார். ஒரேயொரு பைலை திறந்ததற்கே திமுகவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.400 கோடி பறிக்கப்பட்டுள்ளது.
கே.என்.நேரு தம்பி கொலையாளிகளை கூட தி.மு.க ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் சிறுமி காணாமல் போன விஷயத்தையே மூடி மறைத்திருப்பார்கள். அன்பில் மகேஷ் கைதை பழிவாங்கல் என மு.க.ஸ்டாலின் கூறுவது வெட்கக்கேடானது. கரூர்லயே போட்டுருக்கனுமா? அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் சிறைக்கு வெளியே கோஷம் போடுறாங்க! எவ்ளோ கேவலமானவங்க.." எனக் குறிப்பிட்டுள்ளார்.