“மற்ற மாநிலங்களில் 14 மணிநேரம் POWER CUT! தினகரனுக்கு கூச்சமே இல்லையா?”- அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு குறித்த கேள்விக்கு, பல மாநிலங்களில் மின் வெட்டு இருக்கிறது, பஞ்சாபில் 14 மணி நேர மின் வெட்டு இருக்கிறது என செய்தியாளர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “BSNL லைன் பணியின் போது மின்சார லைன்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை. அனைத்து மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. பஞ்சாபில் 14 மணிநேர மின் வெட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பாஸ் விவகாரத்தில் திமுக பிரச்சனையை கிளப்புகிறது. பாஸ் என்ன நிறம் என்பதே முந்தையநாள் தான் எனக்கு தெரியவந்தது. முந்தின நாள் Evening தான் பாஸே பார்த்தேன்.. என் சார்பா என் குடும்பத்தினர் கூட கலந்துக்கல.யாருக்கு பாஸ் கொடுத்தாங்கனு கூட நான் கேட்டுக்கல, எப்பவும் போல திமுகவைச் சார்ந்த சில பேர் அவதூறு பரப்புகின்றனர். மிசாவில்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என தினகரன் கூறுகிறார். அவருக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கி பேசிக் கொண்டிருக்கிறார். துரோகி பழனிசாமியை வீழ்த்துவதுதான் ஒரே நோக்கம் என்று சொன்னவர் இன்று அவரை முதல்வராக்க பேப்பரை தூக்கிக்கொண்டு கவர்னர் மாளிகை வரை செல்கிறார். தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக எதையாவது பேசுகிறார்” என்றார்.