"இன்னைக்கு Party Fund எல்லாமே எல்லாம் அரசுக்கு வருவாயா வந்துட்டு இருக்கு"- நிர்மல்குமார்
வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவை திமுக நாடுகிறது என்பது சபாநாயகரின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “பழனிசாமிக்கு ஆதரவாக திமுக பேசுகிறது. திமுகவுக்கு ஆதரவாக பழனிசாமி பேசுகிறார். எடப்பாடி பழ்ழனிசாமி அதிமுகவில் 10 பேர் தான் உள்ளனர். கட்சியில் உள்ள பிரச்சனையே அவர் தீர்க்கட்டும். எத்தனை பேர் இருக்கிறார்கள் என காட்டுவதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். இன்னைக்கு Party Fund எல்லாமே எல்லாம் அரசுக்கு வருவாயா வந்துட்டு இருக்கிறது. தவறு செய்தவர்கள் கொஞ்ச நாள் தப்பிக்கலாம்.. ஆனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது.. எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. முதலீட்டாளர்களிடம் கட்சி நிதி எங்கேயும் பெறப்படவில்லை. முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாசல் கதவுகள் வெளிப்படையாக திறந்திருக்கிறது. திமுக மற்றும் அதன் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் திரை மறைவு ஒப்பந்தங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு பயந்து பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, மாணவர்களுக்கு இடையேயான "சீனியர் - ஜூனியர் தகராறே" காரணம்
திமுகவின் திரைமறைவு ஒப்பந்தங்களுக்கு பயந்தே பெரிய நிறுவனங்கள் வரவில்லை. ஆட்சியில் இருந்தால் திமுக தங்களது நலனுக்காக தமிழ்நாட்டையே டெல்லியில் அடகு வைத்து விடும். பிரச்சனை வரும்போதெல்லாம் டெல்லி சென்று காலில் விழுவதுதான் DMK-ன் வேலை. தமிழகத்தில் எந்த விதத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை முறைப்படுத்தும் பணியே நடைபெற்று வருகிறது. வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவை திமுக நாடுகிறது என்பது சபாநாயகரின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.” என்றார்.