×

சட்டசபைக்குள் வருவதற்கோ, MLAவாக இருப்பதற்கோ உதயநிதிக்கு தகுதி இல்லை- நிர்மல்குமார்

 

பெண்களுக்கு எதிராக பொதுவெளியில் கொச்சையாக பேசுவது யாராக இருந்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “பெண்களுக்கு எதிராக பொதுவெளியில் கொச்சையாக பேசுவது யாராக இருந்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் உதயநிதி கைது செய்யப்படவில்லை. இழிவாக பேசியதால்தான் கைதாகியிருக்கிறார். பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.. இவ்வளவு கீழ்தரமாக பேசவேண்டிய அவசியம் என்ன? சட்டசபைக்குள் வருவதற்கோ, MLAவாக இருப்பதற்கோ உதயநிதிக்கு தகுதி இல்லை. பெண்களுக்கு எதிராக, கொச்சையாக  பொதுவெளியில் யார் பேசினாலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.. புரட்சி தலைவி ஜெயலலிதாவும், MGR-வும் இருந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்களோ அதைத்தான் முதலமைச்சர் விஜய்யும் எடுத்திருக்கிறார். உதயநிதி பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தையாவது ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை திமுகவினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்ட வேண்டும். தேவையில்லாமல் பெண்கள் குறித்து அவதூறாகவோ, ஆபாசமாகவோ பேசக்கூடாது. இதை இந்த அரசு எந்த காலத்திலும் ஏற்காது” என்றார்.