“உதயநிதி கோமாளி தனத்தை விடவேண்டும், அவருக்கு GenZ னா என்னனு கூட தெரியல”- நிர்மல்குமார்
மேகதாது விவகாரத்தில் CM விஜய் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “உதயநிதி கோமாளி தனத்தை விடவேண்டும், அவருக்கு GenZ னா என்னனு கூட தெரியல.. நீட் தேர்வு போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் 200 ரூபா கொடுத்து GenZ DMKவினரை உக்காரவெச்சுருக்காரு.. தி.மு.கவை வழி நடத்த உதயநிதிக்கும், கனிமொழிக்கும் வாக்கெடுப்பை வைத்து அவரது தகுதியை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா? திமுகவில் கனிமொழியா? உதயநிதியா? என வாக்கெடுப்பு நடத்த தயாரா? உதயநிதி ஸ்டாலின் இனியாவது தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம். சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் புகுந்து திமுக குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தது. மேகதாது விவகாரத்தில் CM விஜய் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பார். கர்நாடகா பயணம் குறித்து CM அலுவலகம் அறிவிக்கும். இரு மாநில பிரச்சினையை நேரில் பேசினால் தீர்வு கிடைக்கும்” என்றார்.