×

“அந்த 4 பேரும் சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி”- அமைச்சர் நிர்மல்குமார் 

 

விஜய் அவர்கள் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க என 3 பேரும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “விஜய் அவர்கள் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக பாஜக தயவுடன் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, EPS, EPS மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம். திமுக, அதிமுக கூட்டணி முயற்சியால், அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி. ராஜினாமா என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. சில ஆண்டுகளில் கட்சியே காலியாகி திமுக, அதிமுக தனித்து நிற்கும். இருவரும் பாஜகவில் இணைந்து ஆளுக்கொரு கேபினட் அமைச்சர் பொறுப்பை வாங்குவார்கள். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறை தான். போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். சரத்குமார் அளித்துள்ள விளக்கத்தை தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. மூத்த தலைவரான வைகோ, என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி நிலையம் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை மின்வாரியத்திற்கு பகிர்வது கட்டாயம். தரவுகளை உடனுக்குடன் பகிராவிடில் மின்உற்பத்தியில் 10% மின் கணக்கீட்டை கழித்து கணக்கீடு செய்யப்படும்” என்றார்.