எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் 1 மணி நேரத்தில் சரி செய்யப்படுகிறது - அமைச்சர் நிர்மல் குமார்
எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் 1 மணி நேரத்தில் சரி செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுகவினரின் தூண்டுதலின் பேரில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறது. எங்கு மின்வெட்டு ஏற்பட்டாலும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்படுகிறது. அடுத்த வாரம் மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி மிகவும் அமைதியாக சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. பாஜக - திமுக இடையேதான் நெருக்கமான உறவு இருக்கிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் ஆளுநர் நடவடிக்கை இல்லை. செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய கோப்புகள் கையெழுத்தாகவில்லை. தனிப்பட்ட பிரச்சனைகளால் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. தேசிய கீதத்தை இருமுறை பாடியதில் எந்த தவறும் இல்லை.
சட்டப்பேரவையின் விதிகள் குறித்து தொிந்து கொண்டு எதிா்கட்சி தலைவா் உதயநிதி பேச வேண்டும். ஆளுநா் உரைக்கு பதிலளிக்கும் நாளில் முதலமைச்சா் பேசுவாா்.குற்றச் சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசு எப்படி கையாளுகிறது எனப் பார்க்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும் வழிமுறையில் ஏதாவது தவறு (Procedural Mistake) சொல்ல முடியுமா? முன்பு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சம்பவங்களில் என்ன நடந்தது? நீதிமன்றமே தலையிட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.