செந்தில் பாலாஜி கைது? ஆளுநரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
Jun 29, 2026, 17:12 IST
தமிழக பொறுப்பு ஆளுநருடன் அமைச்சர் நிர்மல் குமார், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் அவசர சந்திப்பு நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக பொறுப்பு ஆளுநரை, அமைச்சர் நிர்மல் குமார், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முக்கிய அரசு விவகாரங்கள் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க ஆளுநரின் அனுமதி பெறும் நோக்கில், அமைச்சர் நிர்மல் குமார் ஆளுநரை சந்தித்துள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.