☰
×

அமைச்சர் நிர்மல்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்: டி.ஜெயக்குமார்..!

 

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனங்களை பதிவு செய்தார். 

தேனி சப்-ஜெயிலில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, தமிழக சட்ட மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.தேனி சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், டிஜிபியை விட சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கே முழு தார்மீக பொறுப்பு உள்ளது. எனவே, அமைச்சர் நிர்மல்குமார் தனது பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. 

. 31 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தனை கைதிகள் சிறையிலிருந்து தப்பியது அரசாங்கத்தின் தோல்வி என்று அவர் குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பிய அவர், தார்மீகப் பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.