×

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்..!

 

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: 

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பற்றி திமுக என்ன சொல்லப்போகிறது. இது தொடர்பாக திமுக ஆய்வு செய்ய தயாரா என கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் பேசியதாவது, மின்வாரியத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்; நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். Party Fund சொன்னதும் திமுகவிற்கு பயம். திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளிநடப்பு செய்துவிட்டார்கள். வழக்கு கண்டிப்பாக தொடுக்கப்படும்.

பணம் கொடுக்காமல் கடந்த ஆட்சியில் Transfer வாங்கி இருக்காங்களா?எல்லோருக்கும் ஒரு பாணி உள்ளது; எம்ஜிஆர் பேசிய நேரத்தில் அவரை கிண்டல் செய்தனர். அதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றுகின்றனர். இபிஎஸ்ஐ சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது; அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக சந்திக்கவில்லை. முன்பு தலைமைச் செயலகத்திற்குச் சாமானிய மக்கள் வந்ததில்லை. அமைச்சர்களுக்குப் பணம் வாங்கித்தரும் புரோக்கர்கள் தான் சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கத் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். 

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

நாளைக்கு காலையில EB ல இருந்து புதிதாய் நியமிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர்க்கு முதல்வர் கையால் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுக்கப்பட போகிறது மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும் - Minister @CTR_Nirmalkumar 🔥🔥🔥 pic.twitter.com/7hA3qPk5FK

— 𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 (@VTMOffl) June 23, 2026