“இந்த ஆட்சியில் எந்த புரோக்கரும் கிடையாது! ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டாம்” - அமைச்சர் நிர்மல் குமார்
உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றிதான் அரசாங்கம் இயங்கியது, ஆனால் இந்த ஆட்சியில் எந்த புரோக்கரும் கிடையாது என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியி பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றிதான் அரசாங்கம் இயங்கியது, உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றி இருந்த 10 பேர் தான் கடந்த ஆட்சியில் வாழ்ந்தார்கள்.! இந்த ஆட்சியில் எந்த புரோக்கரும் கிடையாது. 5 ஆண்டுகள் மட்டுமல்ல.. அடுத்த 50 ஆண்டுகளும் அண்ணன் விஜய் ஆட்சிதான்.
இனிமேல் யாரையும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க விடமாட்டோம்.. 15 வருடங்களாக போராடி வந்த மக்களின் கோரிக்கையை ஏற்று குவாரிகளை மூடி இருக்கோம்.. எந்த கடையிலாவது குட்கா விற்றால் 100-க்கு போன் செய்து சொல்லுங்கள்.. சீல் வைத்து நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.. மக்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். மின்சாரத் துறையை சீரமைக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்தத் துறையை முழுமையாக சீரமைக்க வேண்டும். மின்னுற்பத்தி தொழிலில் ஈடுபட தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் பெறப்பட்டது. இனி யாரும் 25 லட்சம் கொடுக்க தேவையில்ல... ஊழல் செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள்... தனியார் மின்னுற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தி.மு.க ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மின்வாரியம் தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.