☰
×

“பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை; அதனால் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை”- அமைச்சர் ஆனந்த் 

 

ஒரு ரூபாய் பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை என அமைச்சர் என். ஆனந்த் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மண்டல மாநாட்டில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார். குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்ட அவர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டார். அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமார், கனிமொழி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “ஒரு ரூபாய் பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை.. எந்த ஒரு முதல் போட்டு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்க கண்டிப்பா தவறு செய்ய மாட்டோம், அதிகாரிகள் நீங்க தைரியமா, சுதந்திரமா மக்கள் சேவையை செய்யலாம், நாங்க எந்த இடையூறும் கொடுக்க மாட்டோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்றார்.