×

“Pain Temporary-தான்! சொத்தை எழுதி வைக்க இருந்தேன்..”- மரிய வில்சன்

 

இளம் தலைமுறையினா் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் மரியவில்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் மரியவில்சன், “இளம் தலைமுறையினா் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். போட்டிகளில் தோற்றதற்காக எந்த விளையாட்டு வீரரும், தோல்விக்காக எந்த அரசியல்வாதியும் தற்கொலை செய்து கொண்டதில்லை. நீட் தேர்வை எதிா்த்து போராடிய அனிதாவின் இறப்பு என்னை வருத்தமடைய செய்தது. Pain Temporary-தான், உழைப்பை விடக்கூடாது. சச்சின், தோனி டக் அவுட் ஆகிட்டோம்னு தப்பான முடிவு எடுத்தது இல்ல.. எந்த அரசியல்வாதியும் தப்பான முடிவு எடுத்தது இல்ல.. மாணவர்களாகிய நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க?

Single parent-ஆ என் மகளை வைத்து வளர்க்க சிரமப்பட்டேன். கொரனாவிற்கு பிறகு என் சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைத்துவிட்டு எங்காவது சென்றுவிடலாம் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர் தான் முதல்வர் விஜய்யிடம் அழைத்துச் சென்றார். 4 நாட்கள் வேளாங்கண்ணிக்கு நடைபயணம் சென்றேன், 27 ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கிறேன், இந்த 28ம் ஆண்டில் இவ்வளவு வரவேற்பு இருக்கும் என நினைக்கவில்லை. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என நிறைய இடங்களில் இருந்து மனு கொடுத்து வரவேற்றனர்” என்றார்.