×

தமிழ் இனத்தின் பெருமையும் , வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்- மனோ தங்கராஜ்

 

தமிழ் இனத்தின் பெருமையும் , வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும் என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்வோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வெண்கலக் கால (Bronze Age: 2,000BC to 700BC) நாகரிகத்துக்கு பின்நோக்கி சென்று, ஆரிய - திராவிட கலாச்சார போரை முடிவுக்கு கொண்டுவரும் பெரும் முயற்சி என அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.