×

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் - மனோ தங்கராஜ்!

 

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கலவரங்கள் வரும்போது இணைய சேவையை முடக்குகிறீர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகள் வரும்போது சமூக வலைதளங்களையும், பத்திரிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறீர்கள், தேர்தல் வரும்போது X-தள கணக்குகளையும் முடக்க முயற்சிக்கிறீர்கள்.