×

இறந்தே மருத்துவமனைக்கு வரும் உடல்கள்- அமைச்சர் மா.சு.

 

விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கரூர் அரசு மருத்துவமனைக்கு 29 பேரின் உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம். விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆண்கள், 6 குழந்தைகள், 16 பெண்களாவர்” என்றார்.