கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது- மா.சுப்பிரமணியன்
கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என மாநில அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். நூறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த கல்லூரியின் சிறப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக்கல்லூரியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வருகின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.
கொரோனோ தொற்றுக்கு தமிழகத்தில் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. இந்த கொரோனா தொற்று வீரியம் இல்லாத வைரஸ். இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும், இது குறித்து பதற்றமும் பயமும் தேவையில்லை” என தெரிவித்தார்.