×

"கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால்  புகார் அளிக்கலாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!
 

 

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும்  வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இனி வாரந்தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாத்துறை மா.சுப்பிரமணியன், "கொரோனா மட்டுமின்றி பிற நோயில் இருந்தும் மக்களை காப்பது அவசியம். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் தொற்று பாதிப்பு உள்ளது.நகர்ப்புறங்களில் 28 தெருக்களில் தொற்று பரவியுள்ளது . சென்னையிலிருந்து சுமார் 8 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் மேலெழுந்துள்ளது. ஆனால் அச்சப்பட தேவையில்லை 3வது அலையில் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு கூடுதல் கட்டணம் குறித்து இதுவரை எந்த புகாரும் இல்லை. அதேபோல  புகார் இருப்பின் 104 என்கிற எண்ணுக்கு அழைக்கலாம் . கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்  " என்றார்.