×

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் - அமைச்சர் கோவி செழியன் அதிரடி!

 

மத்திய கல்வி அமைச்சர் மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் குற்றம் சாட்டியுள்ளார். 

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில்  இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. 

இந்த நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மத்திய கல்வி அமைச்சர் மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார். மிரட்டல் எல்லாம் பயனளிக்காது. மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். உங்களிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களுக்குரிய உரிமையை கேட்கிறோம். நிதிக்காக மண்டியிட மாட்டோம். தன்மானத்தோடு தமிழ்நாட்டை உயர்த்தி வெல்வோம் என கூறினார்.