“பிக்பாஸும், சீரியலும் பார்த்தவங்க இன்னைக்கு சட்டசபை பார்க்குறாங்க”- அமைச்சர் கீர்த்தனா
உள்ளாட்சி தேர்தலிலும் மாற்றம் வந்தாதால் தான் மாற்றம் முழுமை பெறும் என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்த சிவகாசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, “யாராவது லஞ்சம் வாங்குனா தைரியமா சொல்லுங்கன்னு இதுக்கு முன்னாடி இருந்த எந்த அரசும் சொல்லாததா நாங்க சொல்லி இருக்கோம்.. ஊழல் அற்ற ஆட்சியை நம்ம முதல்வர் குடுத்துட்டு இருக்காரு ஆனா இன்னொரு கடமை உங்களுக்கு இருக்கு.. மாற்றம்னு ஒன்னு முழுமையா நடக்கணும்னா அந்த அதிகாரமும் நம்ம கைல இருக்கணும்.
லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். இதுக்கு முன்னாடி காசு இருந்தாதா சட்டசபைக்குள்ள போகமுடியும்னு இருந்தது, ஆனா இன்னைக்கு அந்த குறுநில மன்னர்களை தாண்டி சாமானிய மக்கள் உள்ள உட்கார்ந்து இருக்கோம். பிக்பாஸும், சீரியலும் பார்த்துட்டு இருந்தவங்க இன்னைக்கு சட்டசபையை லைவா பார்த்துட்டு இருக்காங்க” என்றார்.