"தனுஷ் விஜய் ஆகமுடியாது"- அமைச்சர் கீர்த்தனா
விருதுநகரில் தான் படித்த பள்ளிக்கு சென்று பழைய பெஞ்சில் அமர்ந்து நினைவுகளை பகிர்ந்தார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவர்களுடன் வேலை பார்க்கும் போது தான் எனக்கு தைரியம் வந்தது. நாமளும் அரசியலில் சாதிக்க முடியும் என்ற எண்ணம் வந்தது. பள்ளி முடித்தால் கல்லூரி, அப்புறம் கல்யாணம்.. இந்த சுழற்சியில் நானும் சிக்கினேன்.. இன்று அமைச்சராக இருக்கிறேன்.. நீங்கள் நினைத்தால் பிரதமரே ஆகலாம். மேயர் பிரியா திரிச்சு பேசுறாங்க. உங்களுக்கே தெரியும். அவங்களை விட அதிகமா என்னை தான் திமுக விர்சுவல் வாரியர்ஸ் மோசமா, ரொம்ப கீழ்தரமா பேசுறாங்க. கண்டிப்பா அண்ணன் நடவடிக்கை எடுப்பாரு. வாழும் MGR ஆக முதலமைச்சர் விஜய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எல்லோராலும் வாழும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. அரசியலில் சிவகார்த்திகேயன், தனுஷால் விஜய்யைப் போல் வரவே முடியாது. இரண்டு மாதங்களில் 'அண்ணன் சீர் திட்டம்' செயல்படுத்தப்படும், பெண்கள் அரசியலில் ஈடுபட்டு சமூகப் பணியாற்ற வேண்டும்" என தெரிவித்தார்.