“இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல!" - வைரல் வீடியோ வதந்திக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களா ? pic.twitter.com/HVdQ2IZFSG
— ர.கார்த்திக்.திமுக🌄🏴🚩💥💪🏻 (@Karthic52378964) August 23, 2026
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தக் காணொளியில் இருக்கும் பெண் நான் அல்ல. ஒருவேளை அது நானாக இருந்தாலும்கூட, அதனால் என்ன ஆக வேண்டும்? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன? எங்கள் கொள்கைகள், ஆட்சிமுறை அல்லது செயல்பாடுகள் குறித்து அவர்களால் எங்களைக் கேள்வி கேட்க முடியாதபோது, அவர்கள் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி புனைக்கதைகளை உருவாக்குகிறார்கள். ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்கக் கூடிய சாராம்சமான எதுவும் இல்லாதவர்களின் மிகப் பழமையான ஆயுதம் பெண் வெறுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.