×

அமைச்சர் காமராஜ் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் : சீமான்

அமைச்சர் காமராஜ் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாக சீமான் தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த நிலையில், அவர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் காமராஜுக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அவர் உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர்
 

அமைச்சர் காமராஜ் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த நிலையில், அவர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் காமராஜுக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அவர் உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காமராஜ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியான சில நிமிடங்களில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்தனர். அத்துடன் நேற்று இரவு 9.40 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று காமராஜின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அமைச்சர் காமராஜ் அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.