×

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சாதாரண வார்டுக்கு மாற்றம்!

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதை அடுத்து, கடந்த 7ஆம் தேதி எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்ததால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அமைச்சர் வீடு திரும்பினார். இதை தொடர்ந்து, அவருக்கு
 

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதை அடுத்து, கடந்த 7ஆம் தேதி எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்ததால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அமைச்சர் வீடு திரும்பினார். இதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. முதலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

கொரோனா தொற்று காரணமாக,
எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அமைச்சர் காமராஜ்க்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சர் காமராஜுக்கு, கடந்த 25 ம் தேதி வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், இன்று மாலை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.