2 லட்சம் பெண்களுக்கு இலவச ஆடுகள்! யாருக்கு கிடைக்கும்?- அமைச்சர் கமலி விளக்கம்
தவெக தேர்தல் வாக்குறுதியில் 2 லட்சம் பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, முதற்கட்டமாக 30,000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கமலி அறிவித்துள்ளார்.
தவெக தேர்தல் வாக்குறுதியில் 2 லட்சம் பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, முதற்கட்டமாக 30,000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கமலி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கமலி கூறுகையில், “யாருக்கெல்லாம் இலவச ஆடுகள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி வருகின்றன. மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள், யாருக்கு ஆடுகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டுக்கோழி, நாட்டு மாடு வளர்க்கக்கூடிய மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். நாட்டு மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்து வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து வளர்ப்பதற்கு தேவையான பயிற்சி முறைகளையும் அதிக அளவில் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார். 30,000 பயனாளிகளுக்கு இலவச கறவை மாடுகள், நாட்டுமாடு வளர்ப்புக்கு ஊக்கம், பட்டா சிக்கல்களுக்கு தீர்வு, பசுந்தீவனத் திட்டம் என விவசாயிகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் எனவும் கால்நடைத்துறை அமைச்சர் கமலி அறிவித்துள்ளார்.