×

கைதான காவலர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக கையிலெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி, விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்
 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக கையிலெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் படி, விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர், காவலர்கள் 5 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவலர் ஸ்ரீதர் மட்டும் போலீசார் பிடியில் சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தார். அதனால் அவரை 24 மணி நேரம் தொடர்ந்து சேஸிங் செய்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே காவலர் ஸ்ரீதருக்கு அரசியல் தொடர்பு இருந்ததாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவருக்கு உதவியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காவலர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சம்பந்தம் இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.