×

கொரோனா மரணத்தை மறைக்க அரசுக்கு அவசியம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் கொரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு கொரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். இது குறித்து காணொளி வாயிலாக பேசிய மு.க ஸ்டாலின், கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கொரோனா மரணத்தை
 

தமிழகத்தில் கொரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு கொரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார்.

இது குறித்து காணொளி வாயிலாக பேசிய மு.க ஸ்டாலின், கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம்
கூறினார். இந்த நிலையில் மு.க ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அதனை மறைப்பதால் அரசுக்கு ஆதாயம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.